Monday, February 8, 2010

சோதனை விழிம்பில் நான்

எல்லாவற்றையும் விட -இந்த
உலகில் அற்புதமாணவள் நீ.....
சிறப்பின் சிகரம் -நீ
தீர்க்கமாய்ச் சாற்றுவேன்
உன் வாழ்வுத் தவிர
ஒன்றுமில்லை.....
என் உரிமைகள் உணர்வுகள்
உன் கட்டளைக்காகவே
காத்து நிற்கின்றன.....
நிலவு எழுதிவைத்த -ஒரு
சீதளக் கவிதை -நீ
நெருப்பு ஊசிகளால்
கிழிப்படுவதுப் போல்-ஏன் நீ
என்னை துயரப்படுத்துகிறாய்..........
சந்தனம் மனத்தைச்
சந்தைகளில் தேடுவதில்லை.....
தென்றல் குளிர்ச்சியைத்
தெருக்களில் பெறுவதில்லை..
என் வாழ்வை நான்
உன்னைத் தவிர்த்து
வேறெங்கே தேடுவேன்!!!
யாகச் சாலையில்
விழிகளை உறக்கத்திற்க்கு விட்டேன்.. நீ
கிடைப்பாய் என்னும் வரத்தை யாசித்து ..ஒரு
வைகைறையில் உனக்காக
ஏங்கி நிற்க்கின்றேன்....,..
கிழக்கில் கூட
அஸ்தமனம் தான்......இருப்பினும்
என் நெஞ்சில் காதல்
என்னும் விதையை விதைத்தவள்-நீ
எப்பொழுது கல்யாணம்
என்னும் பயிரை அறுவடை
செய்யபோகிறாய்.......
முட்கள் தன்னோடு
முளைத்ததற்க்காக -ரோஜா
அழுது அழுதுதான் இதழ்
சிவந்ததுன்று நான்
நினைத்தேன் -ஆனால்
என் முகமோ காதல் -என்னும்
விஸத்தை உண்டதால்தான் என்று
இப்பொழுது புரித்துக் கொண்டேன்.....
என் வாழ்வில் நீ மட்டும்
கிடைக்கவில்லை யென்றால்
கங்கையும் காவேரியும் -கை
கலந்து கொள்வதில்லை யென்றாலும்
கடலில் சென்று கலப்பது -போல்
நாம்..........விண்ணுலகில் சென்றாவது
ஒன்று கலப்போம் என்ற
நம்பிக்கையில் தான்- நான்
இருக்கிறேன்...........
ஆனாலும்......
பெண்ணெ! நிலவைப் பார்!
தன்னொளியை உலகிற்க்குக் காட்ட
மேகங்களோடு போராடி
தன்னொளி காட்டி மகிழ்கிறது ஆனாலும்
உன் வாழ்விலும்
என்வாழ்விலும்-எத்தனை
தடைகள் வந்தாலும் -எத்தனை
எதிர்ப்புகள் வந்தாலும்
அனைத்துயைம் தாண்டி-நாம் இருவரும்
ஒன்றாக வாழ் வேனும்........................

No comments: