Saturday, January 23, 2010

அழகு ராட்சஷியே

சிரிக்க தெரியாத சிற்பமா
_ இவள்
கோபமே வராதே ராட்சஷியா
_ இவள்
அழவே தெரியாதே மழையா
_இவள்
உண்மையே பேசாதே உன்னாத குரல் கொண்டவளா
_இவள்
காதலே செய்யாதே கவியமா
_இவள்
உயிரே எனக்கென்று சொன்னவள்
இவள்.....உயிரற்ற மரமாய் இன்று நான்.... உணர்வுகளாய் அவள்.....

கற்பனை காவியத்தில் நீ..............


அன்பே நீயொரு
பூந்தோட்டம்
உனக்கெதுக்கு பூவின்
தோற்றம்
உன்விழி இரண்டும்
அள்ளிப் பூ
நீ இதழ் விரித்தால்
ரோஜா பூ
உன் புன்சிரிப்பில்
மல்லிகை பூ
உன் கழுத்து
சாமந்தி பூ
உன் இடைமட்டும்
இவ்வுலகில் என் கண் காணா பூ
நீ மலர துடிக்கும்
மொட்டு அல்ல
நான் காய்ந்தும் -நீ
கனியாத கனி
உன் இதழ் சிவப்பு நிறம்
தயாரித்த சிரிப்பிதழ்!
புல் முளைக்காத மைதானம்
உன் நெஞ்சு அதில் பூ
முளைத்திருப்பதேன்
நீ வருகிறாய் என்றதும்
இதயம் கனண்களுக்கு
இடம் பெயர்ந்து விட்டது
உன் ஞாபகங்களை
புத்தகங்களாய் எழுதி
அடுக்கி கொண்டே வந்தேன்
ஒரு கட்டத்தில்
தலையில் எதோ இடித்தது
தடவி பார்த்தேன் நிலா!!!